சில்மியா யூசுப்
குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள கிண்ணியம பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30,01,02, ஆம் திகதிகளில் க்ரேன் பியஸ்டா கார்னிவேல் மிக பிரமாண்டமான முறையில் இடம் பெற்றது.
இதில் கிண்ணியம பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகளோடு ஏனைய கண்காட்சி நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இந்நிகழ்வானது கிண்ணியம சமூக சேவை கூட்டமைப்பு வாலிபர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதோடு ஊர் முக்கியஸ்தகர்களும் அர்களது பங்களிப்பை வழங்கி இருந்தனர்.
மேலும் இதற்கு பாதுகாப்பு உதவியாக சிலாப பொலிஸ் உயர் அதிகாரி மௌசூன் உதவியோடு பிங்கிரிய , பொலிஸ் அதிகாரிகளால் பல பலமான பாதுகாப்பு வழங்கப்பட்டு சிறப்பான முறையில் நடை பெற்றது.
அத்துடன் சுமார் 5000 ற்கு மேற்பட்ட மக்கள் பல பிரதேசத்திலிருந்தும் வருகை தந்து இந்நிகழ்வுகளை கண்டுகழித்தனர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.