மேல்மகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை பரவுவதை தடுக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலய அதிகாரிகள் மற்றும் பொலிசார் இணைந்து "விழிப்புணர்வு குழுக்களை" அவசரமாக நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (28) கம்பஹா மாவட்டக் குழுவில் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பிரசன்ன ரணதுங்க அவர்கள் மேல்மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் மேல்மாகாண பாடசாலைகளை மையப்படுத்தி இவ்வாறான குழுவொன்று உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.