தற்போது அதிகமானவர்கள் முறைமை மாற்றம் (System Change) பற்றி பேசுகிறார்கள். இங்கு குறிப்பாக பல விடயங்களில் முறைமை மாற்றத்தை (System Change) பற்றி பேசுகின்றவர்களால் ஏன் பாராளுமன்ற நிருவாகத்தில் முறைமை மாற்றத்தை (System Change) கொண்டுவர முடியாது என செவ்வாக்கிழமை (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதுபா உ இம்ரான் மகரூப் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் காணப்படுகின்ற குழுக்களில் கூட எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தலைமை பதவியை வழங்க முடியாது எனின் எவ்வாறு சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கி அனைத்து கட்சிகளையும் ஒன்றினைத்து செயற்படுகின்ற அரசாங்கம் எப்படி அமையும் என்பதையும் கேட்கவிரும்புகிறேன் என்றார்.
மேலும் கூறுகையில், தற்போது இருபதுக்கு மேற்பட்ட கெபினட் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், நாற்பதுக்கு மேற்பட்ட இராஜாங்க அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் பிரதி அமைச்சுக்களும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவதாக கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆகையால் இந்த அரசாங்கத்தில் எவ்வகையான முறைமை மாற்றத்தை (System Change) மக்கள் எதிர்பார்க்க முடியும் என்பதை இந்த இடத்தில் கேட்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.