சில்மியூர் முனீரா வாஹித் எழுதிய 'கரையோர வேர்கள்' நூல் வெளியீட்டு நிகழ்வு!


ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு வெளியீட்டில் சில்மியூர் முனீரா வாஹித் எழுதிய 'கரையோர வேர்கள்' நூல் வெளியீட்டு நிகழ்வு 2022.08.21 (ஞாயிற்றுக்கிழமை) பதுளை மாவட்டம் சில்மியாபுர அல் முர்ஷித் மகா வித்தியாலயம் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு அல் முர்ஷித் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம். செய்யத் முஹம்மத் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வெலிமடை வலயக்கல்வி பணிமனையின் பிரதிக் கல்வி பணிப்பாளர்களான ஆர். எம் நவாஸ், கௌரவ அதிதியாக 

வலயக்கல்வி பணிமனையின் பிரதிக் கல்வி பணிப்பாளர் ஜே. டி. எம் முர்ஷித், சிறப்பு அதிதிகளாக அதிபர்களான ஏ. எஸ் ரஹ்மத்துல்லாஹ் எச். எம் பதஹுல்லாஹ், கே. வேலாயுதம் மற்றும் அரசியல் பிரமுகரான ஏ. எம் இல்லியாஸ் அவர்கள் கலந்து கொண்டனர். கண்ணியத்திற்குரிய உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் புத்திஜீவிகள், கல்விமான்கள் மற்றும் மாணவர்கள் பலர் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

இந் நூல் வெளியீட்டு விழாவிற்கு சில்மியாபுரா நலன்புரிச் சங்கம் அனுசரணை வழங்கியுள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.