அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் நாளைய தினம் (20) சேவைக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

