இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.
இதற்கமைய, லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 55 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி, லங்கா ஒட்டோ டீசலின் புதிய விலை 176 ரூபாவாகும்.
ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 77 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. , ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 254 ரூபாவாகும்.
ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 76 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 283 ரூபாவாகும்.
மேலும், லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 95 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 254 ரூபாவாகும்.
