இலங்கையில் கொவிட் மற்றும் டெங்கு நோய்களின் அறிகுறிகள் ஒரே மாதிரியானதாக பதிவாகின்றமை குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்,
இரு நோய்களிலும் காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி என்பன ஒரே மாதிரியான அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இதனால், நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் தாமாக ஒரு முடிவுக்கு வராமல் விரைவில் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.
மேலும், தற்போது பரவி வரும் கொவிட் தொற்று மற்றும் டெங்குவின் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதால், தவறாக நோயைப் புரிந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
