பேருவளை இளங்கலைப் பட்டதாரிகள் அமைப்பினால் பேருவளை,தர்காநகர் மற்றும் மக்கொனைப்பிரதேசங்களில் இருந்து 2019/220,2020/2021 கல்வியாண்டுகளில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் வகையில் பாராட்டு விழாவானது 2022 ஜனவரி 29ஆம் திகதி சனிக்கிழமையன்று தர்கா நகர் அல்ஹம்ரா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிதியாக பேருவளை இளங்களைப்பட்டதாரிகள் அமைப்பின் முன்னாள் தலைமைப்பிராந்திய ஒருங்கிணைப்பாளர் ருஸைக் அஹமட்(Bsc in physical science) அவர்கள் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக அஹ்மத் ஸாதிக்(BBM.special in Accountancy,பிரதி அமைச்சர்-இலங்கை இளைஞர் பாராளுமன்றம்)மற்றும் அஹமட் ஸுஹைர்(BSc in Business studies) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந் நிகழ்விற்கான அழைப்பினை ஏற்று அதிதிகளாக திருமதி பஸ்லியா(அதிபர்-அல்ஹமரா மகா வித்தியாலயம்,தர்கா நகர்),மஸ்னவியா(அதிபர்-பாஸியதுன் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி, பேருவளை) மற்றும் எ.எச்.எம்.ஷியான்(பிரதி அதிபர்-நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி,பேருவளை),முஷ்பான் ஹனபி(BA.இலங்கை பேராதனைப்பல்கலைக்கழகம்)ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் பேருவளை இளங்களைப்பட்டதாரிகள் அமைப்பின் முன்னால் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வைபவத்தில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வுகளும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கு அவர்களது வருகையைப் பாராட்டும் விதமாகவும் இளங்கலை பட்டதாரிகள் அமைப்புக்காக அவர்களது தொடர்ச்சியான ஆதரவை அளித்து வந்தமையினையிட்டும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் 2022 ஆண்டிற்கான புதிய நிர்வாக குழுவினர்களாக தலைவர் பஸ்லுர் ரஹ்மான்,செயலாளர் அப்ரார் முனவ்பர்,பொருளாளர் ஸஹ்ல் அலி மற்றும் பெண்கள் பிரிவில் உபதலைவர் நிஷ்மா பாரூக்,செயலாளர் நிம்ஸா நௌபர் ஆகியோரும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
