பேருவளை அல் பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் கல்லூரிற்கு இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் நிதியில் ஆய்வுக்கூடம் வழங்கி வைப்பு.


பேருவளை அல் பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் கல்லூரிற்கு அண்மையில் ஆய்வுக்கூடமொன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் நான்கு இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்காக கடந்த 26 ஆம் திகதி கையளிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.


அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிப்பதும் அல்லது திறப்பதும் என்பது முற்றிலும் அரசியல் இலாபத்திற்காகவே என்ற பொதுவான கருத்து மக்கள் மத்தியில் இருந்தபோதிலும்,இந்த நிகழ்ச்சித் திட்டம் முற்றிலும் மாறுபட்ட வடிவத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.
பல்வேறு கருத்தியலைப் பிரதி நிதித்துவப்படுத்தும் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டமையே இதற்கு பிரதான காரணமாகும்.

இந் நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற  உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்,

“இன்று நான் இந்த வாய்ப்பை சர்வ கட்சிகளின் மாநாடாகவே பார்க்கிறேன். அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. மரியாதையும் புகழும் மூங்கில் போன்றது என தலைமை தேரர் ஒருவர் கூறிய விடயம் தற்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. கடமைகளை சரிவர நிறைவேற்றுவது மிக முக்கியமான பணியாகும். இஸ்லாத்தில் குறிப்பிடுவது போன்று இறைவனுக்கு மிக நெருங்கிய மனிதர் சமூகத்திற்கு நன்மையை ஏற்படுத்தக் கூடியவர் என்பதாகும்” என தெரிவித்தார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.