இலங்கை மின்சார சபை எரிசக்தி அமைச்சிற்கு 9000 கோடி ரூபா கடன் செலுத்த வேண்டி உள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.
இக் கடனில் ஒரு பங்கினையாவது செலுத்தாவிட்டால் இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்க முடியாது என எரிசக்தி அமைச்சு கூறி உள்ளது.
இதனால் இலங்கை மின்சார சபை பெரும் நெருக்கடி முகம் கொடுத்துள்ளதாக கூறப்படும் அதேவேளை இரு அமைச்சுகளுக்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது.
