எல்ல - பசறை வீதியில் செல்வோருக்கான மாற்று வழி அறிவிப்பு!


எல்ல பிரதேசத்திலிருந்து நமுணுகல வழியாக பசறை செல்லும் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  அறிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக பசறை - நமுணுகல பகுதியில் மரங்கள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதால் மேற்படி வீதியூடான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. எனவே, மேற்படி வீதிக்கு பதிலாக சாரதிகளும், பொதுமக்களுக்கும் பசறை – பதுளை பிரதான வீதியைப் பயன்படுத்துமாறு  கோரப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.