திட்ட கண்காணிப்பு அதிகாரியாக றாசிக் றியாஸ்தீன் நியமனம்


எம்.எஸ்.எம்.ஸாகிர்

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்தீன் திட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் தோப்பூர், தெஹிவத்த போன்ற பிரதேசங்களில் வழங்கப்படவுள்ள குடிநீர் திட்ட  அதிகாரியாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நீர்வழங்கல் அமைச்சருமான வாசுதேவ நாணயக்காரவினால் வெள்ளிக்கிழமை (22) முதல் செயற்படும் வண்ணம் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நியமன கடிதத்தை அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சரத் ரணசிங்க, அமைச்சில் வழங்கி வைத்தார்

இந் நியமனக் கடிதத்தைப் பெற்ற பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த றாசிக் றியாஸ்தீன், இந்த திட்டத்தை இங்கு மேற்கொள்வதற்கான காரணம், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவும் மற்றும் கிண்ணியா பிரதேசத்தில் அதிகூடிய மக்கள் வாழ்வதால் அதற்குத் தனியான திட்டம் ஒன்றை உருவாக்கி, அந்த மக்களுடைய குடிநீர் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்த்து வைப்பதற்கான ஒரு முயற்சியுமாகும். இத்திட்டத்தை செய்து முடிக்கும் போது மக்களின் குடிநீர் பிரச்சினை முழுமையாகவே முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.