பாடசாலைக் கல்வியிலிருந்து இடை விலகிய மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி

 ( மினுவாங்கொடை நிருபர் )
மினுவாங்கொடை சுகாதார சேவைப் பிரிவில், 2001.10.15 - 2003.10.15 ஆகிய வருடங்களுக்கு  இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்து, பாடசாலைக் கல்வியில் இருந்து இடை விலகிய மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி, நாளை 23 ஆம் திகதி (சனிக்கிழமை) மற்றும் எதிர்வரும் 30 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 08.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மினுவாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் (M.O.H. Office) பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
   இதேவேளை, மினுவாங்கொடை பிரதேசத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு 2020 ஆம் ஆண்டு  தோற்றிய மற்றும் 2021 இல் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பைசர் (Pfizer) தடுப்பூசி, நாளை (23) சனிக்கிழமை காலை 08.30 மணி முதல்12.30 மணி வரை செலுத்தப்படவுள்ளதாகவும்,
   இத்தடுப்பூசி, மினுவாங்கொடை செனரத் பரணவித்தான மகா வித்தியாலயத்தில் குறித்த பாடசாலை மாணவர்களுக்கும், மினுவாங்கொடை தம்மிட்ட மகா வித்தியாலய மாணவர்களுக்கும் அத்துடன், உடுகம்பொள சென் பீட்டர்ஸ் கல்லூரியில் குறித்த கல்லூரி மாணவர்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகவும், மினுவாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்  தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.