மாவனல்லை ஸஹிராக்கல்லூரியின் நூற்றாண்டை சிறப்பிக்கும் ஓர் முக்கிய நிகழ்வாக இரத்த தான நிகழ்வு கல்லூரி வளாகத்தில் 2021.10.12 செவ்வாய்க்கிழமை நடந்தேறியது. பாடசாலையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு மாவனல்லை ஸஹிராக் கல்லூரியின் வைத்தியர் சங்கம் பாரிய ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ,மாணவிகள் சங்கம் இந்நிகழ்வை நடாத்தி முடிக்க உறுதுணையாய் செயற்பட்டதுடன் இந்த உதிரம் கொடுக்கும் நற்பணியில் இணைந்த ஒவ்வோர் நல் உள்ளங்களுக்கும் பாடசாலை பழைய மாணவிகள் சங்கம் மரக்கன்றை பரிசாக வழங்கி மர நடுகையையும் ஊக்குவித்தமை பாராட்டத்தக்க விடயமாகும்
அதிக உதிரம் வழங்கப்பட்ட ஸஹிரா பாடசாலையின் பழைய மாணவர்குழுவாக 2019 A/L, பழைய மாணவிகள் குழுவாக 2020 A/L தெரிவுசெய்யப்பட்டு கிண்ணம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பின்த் அமீன்
