நேற்று வெளியிடப்பட்டுள்ள சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 75 சதவீதமானோர் உயர்தரத்திற்கு செல்ல தகுதி பெற்றுள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2020 சாதாரண தர மாணவர்களுக்கான பரீட்சை பெறுபேறு சான்றிதழை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை 3 திறமை சித்திகளுடன் (C Pass) சாதாரண தரத்தில் 6 பாடங்களில் பாடசாலை மட்டத்தில் தேர்ச்சியடைந்துள்ள நுண்கலைப் பிரிவு மாணவர்கள் செயன்முறை பரீட்சை நடத்தப்பட்டு பெபேறுகள் வெளியிடப்படும் வரை உயர் தர கல்வியைத் தொடர முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

