யாழ் இந்தியத்துணைத் தூதரகம், 11 செப்டம்பர் 2021 இந்தியாவின் தேசிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் 100-வது நினைவு தினத்தை அனுசரித்தது.
கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக, யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்கள் தூதரகம் மற்றும் இந்தியா மாளிகையில் மகாகவிக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மாண்புமிகு, மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு அங்கஜன் இராமநாதன், மாண்புமிகு சுரேன் ராகவன், மாண்புமிகு எம்.எ. சுமந்திரன், மாண்புமிகு செல்வம் அடைக்கலநாதன், மாண்புமிகு தர்மலிங்கம் சித்தார்த்தன் மாண்புமிகு சி.சிறீதரன், மாண்புமிகு சி.வி.விக்னேஸ்வரன், மாண்புமிகு வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாண மாநகர முதல்வர் மாண்புமிகு வி.மணிவண்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் திரு. எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற தமிழ் பிரிவு பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, அவர்கள் காணொலி மற்றும் செவ்வி செய்திகள் மூலம் மகாகவிக்கு மரியாதை செலுத்தினர்.




