கல்முனையில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை!


( எம்.  என். எம். அப்ராஸ்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில் சுகாதார வைத்திய அதிகாரி  பிரிவுகளில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் பணி இடம் பெற்று வருகின்றது.

இந்த வகையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம். அஸ்மியின் வழிகாட்டலில் கல்முனை பிரதேசத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசி இதுவரை பெறாத நபர்கள், தடுப்பூசி நிலையங்களுக்கு வந்து தடுப்பூசியினை பெற முடியாதவர்களுக்கான தடுப்பூசி வீடுகளுக்கு நேரடியாக சென்று செலுத்தும் நடவடிக்கை இன்று (27) இடம்பெற்றது. 

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், பொதுசுகாதார பரிசோதகர்கள்,  செயலணி பயிற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டு  தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.