அனைத்து அத்தியாவசிய இறக்குமதி பொருட்களின் விலையை அதிகரிக்க கோரிக்கை


இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் கோரியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.  

உலகம் முழுவதும் விநியோக வலையமைப்பு மற்றும் உற்பத்தி செயன்முறைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்  கப்பல் கட்டணம் பாரியளவில அதிகரித்துள்ளது. கொள்கலன் கட்டணம் 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் உணவு உற்பத்தியில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலையை குறைக்கக் கூடிய பொருட்களின் விலையை உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடி அரசாங்கம் குறைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.