கண்டி மாவட்டத்தில் கொரோனா ஜனாசாவில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடு

ஜனாசா உடைய விடயத்தில்  குடும்ப அங்கத்தவர்கள் ஜனாஸாவை பார்வையிடுவதற்கான பாதுகாப்பு அணிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது

 கவச உடை , முகக்கவசம் கை கவசம் போன்ற பொருட்கள் இன்று முதல் கண்டி மாவட்ட ஜனாசா சொசைட்டி மூலம் இலவசமாக வழக்கப்படும்

கண்டி  மாவட்டத்தில் கொரோனா  ஜனாசா ஏற்படு பட்சத்தில் குடும்ப அங்கத்தவர்கள் ஜனாசாவை பார்வை இடுஇவதற்கான பாதுகாப்பு உடை மற்றும் முகக்கவசம் போன்ற தேவைப்பட்ட பொருட்களை இன்று  அல்ஹாஜ் ரஷீட் Global Visa Centre உரிமையாளரும் கண்டி Sofacity உரிமையாளர் அல்ஹாஜ் மர்சூக் அவர்களினதும் பங்களிப்பால் கண்டி ஜனாசா சங்கத்திற்கு  அன்பளிப்பு செய்யப்பட்டது

கண்டி தேசிய வைத்தியசாலை அபிவிருத்தி குழு அங்கத்தவரும் கண்டி ஜனாசா சங்கத்தின் அங்கத்தவருமான எஸ் எம் ரிஸ்வி அவர்களின் எற்பாட்டில் இன்று கண்டி ஜனாசா சங்க காரியாலயத்தில் அதன் தலைவர் அல்ஹாஜ் பஸ்லூல் மெளலவி , அல்ஹாஜ் உமர்தீன் மெளலவி, அல்ஹாஜ் பாசில் ஆகியோரிடம் 

 கையளிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது விடயமாகும்.

ஊடகக் குறிப்பு

இவ்வாறான வேலைத்திட்டங்களை எல்லாப் பகுதிகளிலும் உள்ள தனவந்தர்கள் முன்வந்து தமது பிரதேசத்தில் உள்ள ஜனாசா சங்கத்திடம் 

ஜனாஸா பெட்டி ஜனாஸாவை பார்வையிடுவதற்கான பாதுகாப்பு அணிகள் போன்ற வற்றை முன் ஏற்பாடு செய்து கொள்வது அவசியம் எனக் கருதுகின்றோம்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.