இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள கரும் பூஞ்சை நோய் தொடர்பாக வெளியான தகவல்


இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ள சிலருக்கு கரும் பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளமை தற்போது சமூகத்தில் பெருமளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது என விஷேட வைத்தியர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் உரையாட்டிய அவர், அம்பாறையில் ஒருவருக்கு கரும் பூஞ்சை நோய் இருப்பதாக இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து சமூகத்தில் இது தொடர்பான அச்சம் நிலவியுள்ளன. 

இருப்பினும் இலங்கை வைத்திய பரிசோதனையின் அறிக்கையின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கரும் பூஞ்சை நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் 2019 ஆம் ஆண்டு 42 பேருக்கும், 2020 ஆம் ஆண்டு 24 பேருக்கும் மற்றும் 2021 ஆம் ஆண்டிள் இதுவரையில் 24 பேருக்கும் கரும் பூஞ்சை நோய் இருப்பது இனங்காணப்பட்டுள்ள நிலையில் இவர்களில் எவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் இந்த கரும் பூஞ்சை நோய் இலங்கைக்கு புதிதல்ல எனவும்,நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்த ​நோய் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.