எந்த தாக்குதலுக்கும் அஞ்ச போவதில்லை - பலஸ்தீன் செய்திகள் தொடர்ந்தும் வெளியிடுவோம் அல் ஜஸீரா


எந்த தாக்குதலுக்கும் அஞ்ச போவதில்லை  - பலஸ்தீன் செய்திகள் தொடர்ந்தும் வெளியிடுவோம் அல் ஜஸீரா..

பாலஸ்தீன் - காஸாவில் இயங்கி வந்த அல்-ஜஸீரா ஊடகத்தின் அரபு பிரிவு செயல்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் நேற்று இஸ்ரேலினால் ரொக்கட் ஏவப்பட்டு தகர்க்கப்பட்டது. 

பலஸ்தீன் மீது இஸ்ரேல் நடத்தும் கொடூர தாக்குதல்களை உடனுக்குடன் நேரலையாக அல்-ஜஸீரா வெளியிட்டு வருகிறது. அதனை தடுக்கும் வகையில் தான் குறித்த ரொக்கட் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. 

தாக்குதல் தொடர்பில் அல்-ஜஸீரா நிறுவனம் குறிப்பிடும் போது, தொடர்ந்தும் பலஸ்தீன செய்திகள் வெளியிடப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்ற கருத்தில் - அல்ஜஸீரா மௌனமாகாது. என அறிவித்துள்ளது. 

அல்-ஜஸீரா கத்தார் அரசாங்கத்தின் நிதி உதவியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.