பல பகுதிகள் மேலும் தனிமைப்படுத்தப்பட்டன!


கொவிட் தொற்றின் அதிக பரவல் காரணமாக நாட்டில் மேலும் 8 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் ரத்மட்டிய கிராம சேவகர் பிரிவும், களுத்துறை மாவட்டத்தின் நாரம்பிட்டிய, பின்வத்த மேற்கு கிராம சேவகர் பிரிவுகளும், பண்டாரகம கிழக்கு கிராம சேவகர் பிரிவும் ,கொழும்பு மாவட்டத்தின் உக்கல கிராம சேவகர் பிரிவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ,கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்விஸ் வத்த பகுதி கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.