இரவு நேர பொருளாதாரம் என்ற எண்ணக்கருவை அறிமுகப்படுத்த வேண்டும்.


காலை 9 மணிக்கு மதுபானத்தை பெற்றுக்கொள்ள எவரும் வருவதில்லை எனவும் காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மதுபான விற்பனை நிலையங்களை திறந்து வைக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டயான கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்கி, அறுவடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற யோசனையையும் அவர் முன்வைத்துள்ளார்.

அரசாங்கத்தின் அனுசரணையில் இதனை செய்ய வேண்டும். அதில் கிடைக்கும் பணத்தை கடன் சுமையில் இருந்து தப்பிக்க பயன்படுத்த வேண்டும்.

இலங்கை என்பது சுற்றுலா சொர்க்கம். மதுபான விற்பனை நிலையங்களை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து வைக்க வேண்டும். நாட்டு மக்கள் நாள் கணக்கில் சம்பாதிக்கும் பணத்தை செலவிட சந்தர்ப்பம் இல்லை.

இதனால், இரவு நேர பொருளாதாரம் என்ற எண்ணக்கருவை அறிமுகப்படுத்த வேண்டும். இவை நாட்டை முன்னேற்றக் கூடிய வழிகள் எனவும் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான டயனா கமகே 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்டார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.