நாளை இலங்கையில் வழங்கப் படவுள்ள தடுப்பூசியின் குணாம்சங்கள் யாவை?.



இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனீசியா (Astrazenecea ) நிறுவனத்தினரால்  உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி தற்போது உலகெங்கிலும் எட்டு நாடுகளில் தயாரிக்கப்படுகிறது.

நாளை இலங்கையில் வழங்கப் படவுள்ளது இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனீசியா நிறுவனமும் சேர்ந்து  இந்தியாவில் தயாரிக்கும் கோவிஷீல்ட் CoviShield எனும் பெயரில் சந்தைக்கு வழங்கப்படும் ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா Oxford - Astrazeneca தடுப்பூசியாகும்.

இந்த தடுப்பூசியின் குணாம்சங்கள் யாவை?.

இந்த தடுப்பூசி பெறுவதன் மூலம்,கோவிட் தொற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து கணிசமாகக் குறைக்கப்படுகிறது. (இந்த அளவு 62% முதல் 90% வரை என்பதை ஆராய்ச்சி அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன)

மேலும், ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இந்த நோய் பரவும் அபாயம் வெகுவாகக் குறைக்கப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியைப் பெற்ற பிறகும் நோய் பரவுகின்றது எனினும், நோயின் சிக்கல்கள் மற்றும் கடுமையான அபாயத்தை கணிசமாகக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. (ஆராய்ச்சி அறிக்கைகளின்படி, ஆய்விற்குற்படுத்தப்பட்ட  10,000 க்கும் மேற்பட்டவர்களில் எவரும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க தேவையானளவு நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படவில்லை என அறியக் கிடைக்கின்றது) இந்த அனைத்து நன்மைகள் இருந்தபோதிலும், இந்த தடுப்பூசி மற்றும் உலக சந்தையில் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து தடுப்பூசிகளும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாங்கள் தற்போது எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மேலதிகமாகமான  பாதுகாப்புக்காகவே  பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதே தவிர, அந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் அனைத்தையும் கைவிட்டு  தடுப்பூசியை மட்டுமே  ஊக்குவிக்கவல்ல.

இந்த தடுப்பூசிகள் யாருக்கு வழங்கப் படுகின்றன?

இந்த தடுப்பூசிகள் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய அபாயத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முன்னுரிமைப்  பட்டியலின் படி வழங்கப்படுகின்றன.

முதலி்ல் தடுப்பூசிகள் வழங்கப்படுவது தொற்றாளருடன் நேரடித் தொடர்பாளர்களான சுகாதார, பாதுகாப்பு துறையினருக்கும் மற்றும் இனங் காணப்பட்ட பிற தொகுதியிருக்கும்  வழங்கப்படுகின்றன.

இரண்டாவது, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அதன்பிறகு மூன்றாவதாக ஆபத்து காரணிகளைக் கருத்தில் கொண்டு,  வயது குறைந்தவர்களுக்கும்  கட்டங்கட்டமாக  தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி தற்போது எந்த வகுதியினருக்கு அனுமதிக்கப்படவில்லை?

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கர்ப்பிணி தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசிகளுக்கு கடுமையான ஒவ்வாமை உள்ளவர்கள்.

இந்த காரணிகளுக்கும் மேலதிகமாக, தடுப்பூசி வழங்க தனிப்பட்ட ஒவ்வொரு நபரின் பொருத்தத்தையும் கருத்தில் கொண்ட பின்னரே சுகாதார ஊழியர்கள் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை மேற்கொள்வர்.

கொரோனா தொற்று உள்ள ஒருவர் இந்த தடுப்பூசியை பெற  முடியுமா?

இதற்கு முன்னர் உங்களுக்கு நோய் இருந்ததா இல்லையா என்பது தடுப்பூசி பெறலுக்கு  ஒரு தடையல்ல. எனவே, மேற்கண்ட வகைகளைச்சாரா  அனைவருக்கும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.