சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின்(FIFA )நடுவராக கல்முனையை சேர்ந்த ஜப்ரான் தெரிவு !

எம்.என்.எம்.அப்ராஸ்)

சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின்(FIFA )நடுவராக கல்முனையை சேர்ந்த ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தினால் -(FIFA )ஒவ்வொரு வருடமும் நடுவருக்கான தெரிவு இடம்பெறும்


இதற்கமைய 2021 ஆண்டுக்கான சர்வதேச நடுவர்களுக்கான (FIFA International Referees ) பெயர் பட்டியலில் இலங்கையிலிருந்து ஆதம்பாவா முஹம்மட் ஜப்ரான் உட்பட ஆறு பேர் பிரதான நடுவராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.


கல்முனையை சேர்ந்த ஆதம்பாவா முஹம்மட் ஜப்ரான் அவர்கள் சர்வதேச நடுவராக தெரிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் நாட்டிற்க்கும் அம்பாரை மாவட்டத்திற்க்கும் பெருமை சேர்த்துள்ளார் .


சிறு வயது முதல் கால்பந்தாட்ட துறையில் ஆர்வம் கொண்ட இவர் தாம் இத் துறையில் நடுவராக வர வேண்டுமென விரும்பியதாகவும் தனது இலச்சியமாக கொண்டார் அவரின் கனவும் நனவானது


கால்பந்தாட்ட போட்டிகளில் தேசிய ரீதியில் பல திறமைகளை வெளிக்காட்டியதுடன் இவர் பல தேசிய ரீதியிலான மற்றும் உள்ளூர் உதைப்பந்தாட்ட போட்களில் பிரதான நடுவராக கடமையாற்றியுள்ளார் .


தனது 15 வது வயதில் 2010 ம் ஆண்டு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் FFSL Grade -lll இடம்பெற்ற பரீட்சையில் சித்தியடைந்து நடுவராக தனது மத்தியத்துவ பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் 2012 ல் FFSL Grade - ll REFEREE யாகவும் 2017ல் FFSL Grade - l REFEREE யாக சித்தியடைந்து தரமுயர்த்தப்பட்டார். 


இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட சுற்றுப்போட்டிகளில் மிகத் திறமையாக மத்தியஸ்துவம் செய்து FFSL NATIONAL ELITE REFEREE யாக உயர்ந்து இலங்கை முழுவதும் பிரபல்யமடைந்தார். குறிப்பாக 2020 FFSL Champion League அரை இறுதிப் போட்டியில் REFEREE யாக மிகத் திறமையாக கடமையாற்றி அனைவரினதும் பாராட்டுகளைப் பெற்றார்.


ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் AFC REFEREE ACADEMY யில் இலங்கை சார்பாக தெரிவு செய்யப்பட்டு மலேசியாவில் வருடத்திற்கு மூன்று தடவைகள் என்று REFEREE COURSE யினை இரண்டு வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றார் அத்துடன் இவர் FIFA வினால் நடாத்தப்பட்ட FIFA REFEREEING MA COURSE யில் மூன்று தடவைகள்பங்குபற்றியுள்ளார்.

இவர் மாலைதீவு Champion. League போட்டிக்கு மத்தியத்துவம் செய்ய இரண்டு தடவைகள் மாலைதீவுக்கு சென்று சர்வதேச ரீதியாகவும் தடம் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அத்துடன் இவர் அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் உப செயலாளராகவும் உள்ளார் மேலும் இவர் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் விளையாட்டு ஆசிரியராக கடமையாற்றும் இவர் இவ் பாடசாலையின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது .

இவர் கல்முனையை சேர்ந்த யூ. எல் .ஆதம்பாவா மற்றும் செயின் ஜெஸ்மின் ஆகியோரின் புதல்வராவார் 

இள வயதில் கால்ப்பந்தாட்ட துறையில் சாதிக்க முடியும் என்பதற்கு முடியும் என்பதற்கு இவர் இளைஞர்கள் மத்தியில் முன்னுதாரணமாகும் .


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.