மாத்தளை வைத்தியசாலையில் சிலருக்கு கொரோனா தொற்று





 மாத்தளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் 5 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வருகை தந்த இரண்டு நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் மூன்று பேருக்கு இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசேல திஸாநாயக்க தெரிவித்தார். 

அந்தவகையில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

இதற்கு முன்னர் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.