முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமானசெயல்




யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள கண்டனத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அரசின் மேலிடத்தின் உத்தரவின் பிரகாரம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் நேற்றிரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரும் இராணுவத்தினரும் பெரும் எண்ணிக்கையில் பல்கலைக் கழக வாயிலில் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு வழங்க இந்த அருவருக்கத்தக்க – ஈனத் தமான – செயல் அரங்கேறியுள்ளது.

தமிழினப் படுகொலையின் அடையாளமாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விளங்குகின்றது.இது இடித்து அழிக்கப்பட்டமை தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும். இந்த அராஜகத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றன” என்றார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.