பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களுக்கு கோவிட் 19 பரிசாதனையின் இறுதி் பெறுபேறு வெளியாகியது.

கடந்த சில நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் மற்றும் அவருக்கு பொறுப்பாக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நெகட்டிவ் என்பதாக பெறுபேறுகள் கிடைத்தன. இருப்பினும் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் சகிதம் உத்தியோகத்தர்கள் தங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களோடு கோவிட் 19  பாதிப்புக்குள்ளான ஏனைய சக பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் குணமடைய தாம் பிரார்த்திப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்கள் தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.