நாளை முதல் தனிமைடுத்தப்படும் மற்றும் விடுவிக்கப்படும் இடங்கள் ( முழு விபரம் )

 


கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவுகள் நாளை ( 07) அதிகாலை 5.00 மணி முதல் நீக்கப்படும் என அரசு தகவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.


அந்தவகையில்  நாளை முதல்,

கொழும்பு மாவட்டத்தில்

- ப்ளுமெண்டல் பொலிஸ் பிரிவு

- வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் விஜயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும்,

கம்பஹா மாவட்டத்தில்,

- வத்தளை பொலிஸ் பிரிவு

- பேலியகொட பொலிஸ் பிரிவு

- கிரிபத்கொட பொலிஸ் பிரிவு

போன்ற பகுதிகளும் தனிபடுத்தப்படுத்த பகுதிகளாக அடையாளப்படுத்தபடமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்துடன், கொழும்பில் முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிரான்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டாம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொட, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோன்று , கொம்பனிவீதி பொலிஸ் பிரிவின் வேகந்த கிராம சேவகர் பிரிவு, பொரள்ளை பொலிஸ் பிரிவின் வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவு மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் சாலமுல்ல கிராம சேவகர் பிரிவும், லக்சந்த சேவன தொடர்மாடி குடியிருப்பும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய மட்டக்குளி பொலிஸ் பிரிவின் ரன்திய உயன வீட்டுக் குடியிருப்பு மற்றும் பெர்கசன் வீதியின் தென் பகுதி ஆகியன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோன்று, கொம்பனிவீதியின் ஹு னுப்பிட்டி கிராம சேவகர் பிரிவு, கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் 60ஆவது தோட்டம் மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் கோகிலா வீதி ஆகியன நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன.

மேலும், வத்தளை பொலிஸ் பிரிவின் கெரவலபிட்டிய, ஹேக்கித்த, குருந்துஹேன, எவரிவத்தை மற்றும் வெலிகடமுல்ல ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பேலியகொட பொலிஸ் பிரிவின் பேலியகொடவத்தை, பேலியகொட கங்கஹபட, மீகஹவத்தை மற்றும் பட்டிய வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் வெலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.