எரிக்காதீர்கள் வலிக்கிறது
சுட்டு விடாதீர்கள் மனம் கதறுகிறது
அம்மா ,அப்பாவை எரிப்பது பிள்ளைகள் தாங்காது
பிள்ளைகளை எரிப்பது பெற்றோர்களுக்கு தாங்காது
கணவனை எரிப்பது மனைவிக்கு தாங்காது
மனைவியை எரிப்பது கணவனுக்கு தாங்காது
உடைமையை பறித்தாலும் பெற்றுக்கொள்ளலாம், பொறுத்துக்கொள்ளலாம்
இறுதி உரிமையை பறித்தால் பெறவும் முடியாது,பெருக்கவும் முடியாது
அனைத்தின் ஆற்றலும் அவனிடம் அல்லாஹ்விடம்
சுட்டெரியும் நெருப்பையும் பணித்துளிகள் ஆக்கக்கூடியவன் பொறுப்பு சாற்றுகிறோம் அவனிடம்
உணர்வுகளை அடக்க முடியவில்லை
எரிக்கப்பட்டவை ஒட்டி இருந்த உறவு என்று நினைத்தாலே அதை தாங்க முடியவில்லை
எங்கள் உணர்வுகளை யாரும் மதிப்பதில்லையா இல்லையென் அதை எம் அரசு அறியவில்லையா
இந்த நாடு எமது தாய் என்கிறோம்
இங்கு உணவளிக்கும் வளங்களை தந்தை என்கிறோம்
எம்மை ஆளும் அரசை எமது ஆசானாய் நினைக்கிறோம்
தப்பு செய்தால் தண்டிக்கும் உரிமை உண்டு உங்களிடம்
நல்லவற்றை அமுல் படுத்தி அதை கற்பிக்கும் அதிகாரம் உண்டு உங்களிடம்
அது போல அனைவரையும் சம குழந்தையாய் ஆதரித்து அன்பு காட்டும் கடமையும் உண்டு உங்களிடம்
எங்கள் உணர்வுகளை மதியுங்கள்
சரியான முறையில் எங்களை மதிப்பிடுங்கள்
தீவிரவாதம் இருக்காது
பிரிவுகள் இருக்காது
வேறொரு அரசும் மாறாது
உங்களுக்கு கௌரவம் கிடைக்கும்
எங்களிடம் ஒற்றுமை பிறக்கும்
நாளை புது ஒரு தலைமுறை பிறக்கும்
உங்கள் ஆட்ச்சியை சரித்திரமாய் கற்கும்
உலகமே நம்மை போற்றி பின்பற்றும்
இப்படிக்கு ஒரு சமுதாயத்தின் குரலாய் உங்கள் மாணவன் :- Ziyard ✍️

