புனிதர்கள் வாழும் இடமாக இப் பூவுலகு மலரட்டும்.

புனிதர்கள் வாழும் இடமாக இப் பூவுலகு மலரட்டும்.

அகிலத்திற்கு அருட்கொடையாய் இவ் அவனியில் வந்துதித்த உத்தம நபியின் உதய தினமான இன்றைய பொழுது ஒரு நன்னாளாக மலரட்டும்.

உலகம் மனித நேயத்தை தொலைத்திருந்த இருண்ட வரலாற்றை அன்பு , கருணையால் மாற்றியமைத்த ஒரு வரலாற்று புருஷராக அன்னார் தமது வாழ்வை எமக்கெல்லாம் வழிகாட்டியாக்கி விட்டுச் சென்றுள்ளார்கள்.


அன்னவர்களின் வழிகாட்டுதல் சத்தியமானதாயும்    உலகம் முழுவதும் மக்களால் விரும்பப்படுவதாயும் இருந்தன.


இன்றேல் அரேபிய பாலைவனத்தில் மலர்ந்த இஸ்லாம் இன்று உலகளாவிய ரீதியில்  பரவியிருக்க முடியாது. 


அன்பு இரக்கம் ஈகை மனிதநேயம்  விட்டுக்கொடுப்பு போன்ற அறங்களின் அடிப்படையில் இஸ்லாத்தை கட்டியெழுப்பிய இறைத் தூதரின் இனிய வாழ்வும் வரலாறும் மனித குலத்திற்கோர் மகத்தான வழிகாட்டுதல்கள் என்பதில் எந்தச் சந்தேகமில்லை. 


அன்னாரது புனித வழியில் மானுடம் பயணிக்கும் பொழுது புனிதர்கள் வாழும்  புண்ணியத் தளமாய் இப்பூவுலகு நிச்சயம் மாறும். 

அனைவருக்கும் எனது மீலாதுன் நபி நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக. 

கே.காதர் மஸ்தான். 

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சரும்.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.