மாத்தறை மாவட்ட உதவி செயலாளர் நதீ ஜயவிக்ரம கர்ப்பிணியான அவர் இரத்த பரிசோதனை மேற்கொள்வதற்காக மாத்தறை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார் என பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன் போது இரத்த பரிசோதனையின் போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக இன்று உயிரிழந்துள்ளதாக குறிப்பிடதக்கது.
சடலம் தொடர்பான பிர பரிசோதனை மாத்தறை வைத்தியசாலையில் சட்ட வைத்தியரினால் மேற்கொள்ளப்படவுள்ளது.
இவர் 2012ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்குள் நுழைந்து விளையாட்டுத் துறை அமைச்சில் முதல் நியமனம் பெற்றுள்ளார்.
அத்துடன்,2013ஆம் ஆண்டு வெலிப்பிட்டிய உதவி பிரதேச செயலாளராகவும், 2016ஆம் ஆண்டு திஹகொட உதவி பிரதேச செயலாளராகவும், 2017ஆம் ஆண்டு முதல் உயிரிழக்கும் வரை மாத்தறை மாவட்ட செயலாளராக செயற்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

