கொரோனா ஒரு மில்லியனைத் தொட்டது.
ஒரு மில்லியன் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவான உலகின் ஐந்தாவது நாடாக ஆர்ஜன்டீனா இடம்பிடித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் புதிதாக 12,982 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அந்நாட்டின் மொத்த தொற்றுச் சம்பவங்கள் 1,002,662 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தவிர, ஆர்ஜன்டீனாவில் நோய்த் தொற்றினால் மேலும் 451 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 26,716 ஆக உயர்ந்துள்ளது.
45 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஆர்ஜடீனா உலகில் ஒரு மில்லியன் நோய்த் தொற்று சம்பவத்தை கடந்த மிகச் சிறந்த நாடாகவும் உள்ளது.
இந்த எண்ணிக்கையை இதற்கு முன்னர் கடந்த அமெரிக்கா, இந்தியா, பிரேசில் மற்றும் ரஷ்யா அனைத்தும் மிகப் பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகளாகும்.
நோய்த் தொற்றுக்கு எதிராக தென் அமெரிக்காவில் எல்லைகளை மூடி ஏனைய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்த முதல் நாடுகளில் ஒன்றாக ஆர்ஜன்டீனா இருந்தபோதும் அந்நாட்டில் கடந்த சில மாதங்களில் நோய்ப் பரவல் அதிகரித்துள்ளது.

