தினமும் நுளம்பு கடிப்பதனால் கல்முனை மக்களுக்கு நடந்தது என்ன? மக்களின் குரல்

தினமும் நுளம்பு கடிப்பதனால் கல்முனை மக்களுக்கு  நடந்தது என்ன? மக்களின் குரல் 


தினமும் நுளம்பு கடிப்பதனால் கல்முனை மக்களுக்கு  அறிப்பு வருவதாக கல்முனை மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கிறீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டம் மற்றும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பின்பகுதியில் உள்ள வெட்டுவாய்க்கால் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


குறித்த சீர்கேட்டினால் தினமும் நுளம்பின் பெருக்கம் ஏற்படுவதுடன் துர்நாற்றமும் வீசுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர சபை கவனயீனமாக செயற்படுவதாகவும் தற்போது டெங்கு அச்சுறுத்தலினால்  3 வயது குழந்தை ஒன்று இப்பகுதியில் இனங்காணப்பட்டுள்ளது.

சுமார் 2ஆயிரம் மக்கள் வசிக்கின்ற இவ்வீட்டுத்திட்டத்திற்கு அருகில் உள்ள குறித்த வெட்டுவாய்க்காலை  துப்பரவு செய்து தந்துதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.