மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சமூதாய அடிப்படை அமைப்புக்களின் மாவட்ட கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சமூதாய அடிப்படை அமைப்புக்களின் மாவட்ட கூட்டம் நேற்று மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம்
மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட
செயலாளருமாகிய கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது.

இதில் சமுர்த்தி மாவட்ட சமூதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களில் இருந்து அங்கத்தவர்களை தெரிவுசெய்து சமுர்த்தி தேசிய சமூதாய நிதியத்திற்கான கட்டுப்பாட்டு சபையினை உருவாக்குவதற்கான மாவட்ட மட்டத்தில் இரண்டு அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான கூட்டமாக அமைந்திருந்தது.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு அனுப்பி
வைப்படுகின்றவர்கள் அங்கு நிகழும் தேசியமட்ட தீர்மானங்களுக்கு இவர்களின் பிரசன்னமும் பங்களிப்புக்களும்; அங்கு எடுக்கப்படுகின்ற திர்மானங்களுக்கு அவசியமாக கருதப்படுகின்றது.

சமுர்த்தி சமூதாய அமைப்புக்களினால்
சேகரிக்கப்படுகின்ற பணம் மகாசங்களில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியின் மூலம் அடிப்படை வசதிகள் அற்ற மிகவும் வறுமைக்கோட்டிக்குள் வாழ்கின்ற குடும்பங்களுக்கு முகாமைத்துவ
பணிப்பாளர்கள் மகாசங்கங்களுக்கு உதவுமாறு அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Azhar Sadath
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.