அரச நிறுவனத்தில் அதிகாரியால் தொடர்ந்தும் தாக்கப்படும் ஊழியர்கள்.

 அரச நிறுவனத்தில் அதிகாரியால் தொடர்ந்தும் தாக்கப்படும் ஊழியர்கள்.

நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் வைத்தியப் பொறுப்பதிகாரியினால் தொடர்ந்தும் வைத்தியசாலையின் ஊழியர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.

நிந்தவூர் அரசயடித் தோட்டம் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் வைத்தியப் பொறுப்பதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊழல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வில்லை என்பதற்காக வேண்டி வைத்தியசாலையின் வைத்தியப் பொறுப்பதி காரியினால் வைத்தியசாலையின் ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

கடந்த 2020.07.07 ஆம் திகதி வைத்தியசாலையின் வைத்திய உத்தியோகத்தர் ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்டு இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அதே நேரம்2020.07.21 ஆம் திகதி வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் ஒருவர் தாக்கப்பட்டு சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.




தற்போது 2020.09.24 ஆம் திகதி வைத்தியசாலையின் மற்றுமொரு ஊழியர் தாக்கப்பட்டு பின்னர் சிகிட்சைக்காக வைத்தியசாலைக்குச் செல்ல விடாமல் பிரதான நுழைவாயிலைப் பூட்டுப் போட்டு பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்ததன் பின்னர் தற்போது (2020.09.25) நிந்தவூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


குறித்த ஊழியரினைத் தாக்கி தடுத்து வைத்தது மட்டுமல்லாமல் இலங்கை அரச நிர்வாக சட்டதிட்டங்களுக்கு முரணான வகையில் அவருக்கு நாவின்ன தலைமைக் காரியாலயத்திற்கு கடமைக்கு செல்லுமாறு இடமாற்றம் வழங்கி தபால் தந்தி மூலம் விடுவிப்புச் செய்துள்ளார்.

ஓர் அரச நிருவனத்தினை தனது சொந்த தனியார் நிறுவனம் போல் செயற்படுத்தும் அதிகாரத்தினை யார் வழங்கியது?

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.