வன்னி மாவட்ட வாக்காள பெருமக்களுக்கு இதயத்து நன்றிகள்
0
August 06, 2020
நேற்று இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நாடாளுமன்றத் தேர்தலில் எம்மை பெரு விருப்போடு ஆதரித்து உங்களது மேலான வாக்குகளை மிகுந்த நம்பிக்கை யோடு வழங்கிய வன்னி மாவட்ட வாக்காள பெருமக்களாகிய உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
மேலும்
எதிர்வரும் காலங்களிலும் எனது இனமத அரசியல் பேதம் கடந்த மனித நேயங்கொண்ட மக்கள் பணியினை தொடர்ந்தும் ஆற்றுவேன் என உறுதியளிப்பதோடு வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட எங்களது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் என்னை அதிகூடிய விருப்பு வாக்குகளால் வெற்றி ஈட்ட வைத்த உங்களின் அன்புக்கும் பாசத்திற்கும் என் இதயத்து நன்றிகளை மீண்டும் சமர்பிக்கிறேன்.
கெளரவ காதர் மஸ்தான் அவர்கள்.
கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்
வன்னி மாவட்டம்.

