கொடிய கொரோனா மனிதன்.
கொரோனாவை விட சில கொடிய மனிதர்கள் இங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
ஊடகவியலாளர் சில்மியா யூசுப்
மனிதன் மனிதனை காப்பாற்றுவான்...
ஆனால் அனைத்து மனிதனும் மனிதனை காப்பாற்றமாட்டான்.
மனிதன் மிருகங்களை காப்பாற்றுவான்..
ஆனால் அனைத்து மனிதனின் உள்ளமும் மிருக உயிரினங்களை காப்பாற்ற துணிந்து நிற்காது.
ஏன் எல்லாம் ஒரே உயிர் தானே ???
வெட்டினால் இரத்தம் ஒரே நிறம்....
அடித்தால் கதறுகிறோம் அவைகளும் கதறுகிறது
ஆனால் வலி ஒன்று தானே???
சாப்பாட்டிற்கு அலைந்து திறிகிறோம்...
ஏன் அவைகளும் அலைந்து திரிகின்றன...
உணர்வுகளும் ஒன்று தானே...
இதில் என்ன சந்தேகம்????
மனிதனுக்கு ஆறரிவு....
ஆனால் அவைகளுக்கோ ஐந்தரிவு...
உண்மை என்னவெனில் மனிதனை விட சிறந்தது ஐந்தரிவு கூட சொல்லலாம்....
மனிதனோ மிருகங்களை விடவும் பல கொடிய அட்டகாசங்களை செய்கிறான்...
இனம்,சாதி, வெள்ளையன் கருப்பையன் என வேற்றுமை பார்ப்பதும் மனிதன் தான்...
மனித நேயமின்றி நடந்து கொள்பவனும் மனிதனே தான்....
வயிற்றில் சுமந்த குழந்தைகளை ஒரு போதும் மிருகங்கள் கலைக்க நினைத்ததில்லை கலைத்ததும் இல்லை...
சுமந்து பெற்றவைகளை தூக்கி எறிந்து விட்டு செல்வதுமில்லை.....
இதையெல்லாம் யார் செய்வார்????
மனிதன் தான் செய்வான்...
மிருகங்களின் சிசுக்களை நாமே தான் அடித்து நசுக்கி வீசுகின்றோம்....
ஆனால் வாய் பேச தெரியாத மிருகங்களின் உணர்வுகளை நாம் சிந்தித்து பார்த்ததுண்டா???
மனிதா தெரிந்து கொள்..
உயிரும் ஒன்று வலியும் ஒன்று உணர்வுகளும் ஒன்று...
கருப்பபையில் யானையின் சிசு இருக்கிறது என்று தெரிந்தும் கூட அன்னாசிப்பழத்திற்குள் வெடி மருந்தை இட்டு கர்ப்பிணி தாய் யானைக்கு கொடுத்தாயே கொடூரம் பிடித்தவனே...
நீ கொரோனாவை விடவும் கொடூரமானவன் தான்....
மனிதர்களே!!
உயிர்களை காப்போம்...
மிருகங்களை அநியாயம் செய்யாமல் மனிதத்தன்மையோடு வாழப் பழகுவோம்...
ஆக்கம்.
ஊடகவியலாளர் சில்மியா யூசுப்

