ஈமானின் கண்ணீர்க் குரல் .....
பத்துவரிகளில் பட்டை தீட்ட
நஜீம்தீன் மொஹம்மத் அஸாத். ஹொரவபொத்தான.
அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்று கொரோனா
மனிதனால் சூடு பிடிக்க முடியவில்லை
வல்லரசுகளும் வலுவிழந்த நிலையில்
இருக்க
கைகளை கழுவி விட்டு
நாம் ஜெவ்லிகடைகளில் பட்டாளத்துடன்..
சந்தைகளிலும் வங்கிகளிலும் வரிசையாய்...
அடகு கடைகளில் ஆள்மீது ஆள்...
இப்படி இருக்க
ஏன் ஐவேளை தொழுகைக்கு
மட்டும்
ஐவேளை முழு உடலையும் கழுவிவிட்டு செல்ல முடியாத நிலமை
ஏன் பள்ளிகளில் மாத்திரம் இந்த நிலமை??????
அன்று நம் மூதாதயர்களின்
பள்ளிவாயல்கள் ஓட்டை
ஆனால் அவர்கள் ஈமான் கோட்டை
இன்று
பள்ளிவாயல்கள் கோட்டை ஆனால்
ஈமானில் பல ஓட்டை
பள்ளி வாயல்களை மீளத்திறக்கப்படாதா .....
தனித்தனியாவது தொழ எமது தலைவர்கள் அனுமதி தரமாட்டார்களா ?

