இலங்கையிலுள்ள புலனாய்வு அறிக்கையிடல் மையத்தின் விருது விழா நாளை கொழும்பு ஓசோ ஹொடலில்.

இலங்கையிலுள்ள புலனாய்வு அறிக்கையிடல் மையத்தின் விருது விழா

இலங்கையில் அமைந்துள்ள புலனாய்வு அறிக்கையிடல் மையம் (CIRSL) தனது முதல் விருது வழங்கும் விழாவை கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
குறித்த நிகழ்வு எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை  9.30 மணிக்கு கொழும்பு 3 இல் அமைந்துள்ள ஓசோ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் சாரா ஹுல்டன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்.
இலங்கையில் அமைந்துள்ள புலனாய்வு அறிக்கையிடல் மையத்தினால் தெரிவுசெய்யப்பட்ட இளம் ஊடகவியலாளர்களுக்கு கடந்த செப்டெம்பர் மாதம் புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான திறன்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு பயிற்சியளிக்கப்பட்ட ஊடகவியாலாளர்களில் 14 பேர் தமக்கு வழங்கப்பட்ட பயிற்சியின் அடிப்படையில் புலனாய்வு அறிக்கையிடலை கடந்த நான்கு மாதங்களாக மேற்கொண்டு தம்மால் மேற்கொள்ளப்பட்ட அறிக்கையிடலை வெளியிட்டிருந்தனர்.
இலங்கையில் அமைந்துள்ள புலனாய்வு அறிக்கையிடல் மையத்தின் புலமைப்பரிசில் திட்டத்தின் புலனாய்வு அறிக்கையிடலை முழுமைப்படுத்திய ஊடகவியலாளர்களின் அறிக்கைககள், சுயாதீன தெரிவுக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டு, அதில் அதிசிறந்த புலனாய்வு அறிக்கையிடலை மேற்கொண்ட 3 ஊடகவியலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள ஊடகவியல் சிறப்புக்கான மையத்திற்கு (CEJ) சிறப்பு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக அழைத்துச்செல்லப்படவுள்ளனர்.
இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கு பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சர்வதேச ஊடக ஆதரவு (IMS) ஆகியன இணைந்து ஆதரவு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
SilmiyaYousuf
Journalist

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.