எரிபொருள் கட்டணத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பான பத்திரம் இன்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி வள அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில். அதன் பிரதிபலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிக்கையிட்டு, அமைச்சர்களின் அனுமதியுடன் நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

