இத்தாலியில் இருந்து வந்தவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை
இம்மாதம் முதலாம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவர்கள் மற்றும் தனிமைப்படுத்தும் காலத்திற்கு உட்படுத்தப்படாதவர்களை அடையாளம் காணவும், தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்றுவரும் நேரடி தொலைக்காட்சி உரையாடலில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்

