விதிவிலக்காகிப்போன விமான சேவையினர்
Binth ameen
Seusl
கோரோனாவின் அகோரம் மக்களின் கேலி நடவடிக்கைகளால் உயர்ந்து போவதனை அவதானித்த அரசாங்கம் "கேபிfயு" வால் எம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
எங்கு பார்த்தாலும் இப்போது கோவிட் பற்றிய அப்டேட்கள் அடுக்கடுக்காய்வர மறுபக்கம் தாதிமார் ,இராணுவத்தினர் என ஒருகுறிப்பிட்ட சிலரை தியாகிகளாக சித்தரித்து உற்சாகமளிப்பது சந்தோஷம் அளிக்கிறது.
இக் கொரோனாவானது இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்ததை ஏற்கும் அனைவரும் தியாகிகள் வரிசையில் விமான சேவை துறையினரை உள்நுளைக்காமை வேதனையளிக்கிறது.
இலங்கைக்கு வரும் அனைவரையும், தம் உயிரை பணயம் வைத்து முற்று முழுதாக பரிசோதனை செய்து முதலில் எம்மீது கோவிட் பற்றி கரிசணை கொள்வதே, கடுநாயக விமானநிலையத்தில் பணியாற்றுபவர்கள்தான்.இருந்தும் வட்சப், இன்ஸ்டகிரேமில் heroes பட்டியலில் இவர்கள் இல்லாமை எனக்கு எரிச்சலாய் இருக்கிறது
ஊரடங்கிலும் வேலை செய்து அரும்பாடுபடும் அவர்களுக்கும் உயிரும் குடும்பமும் இருக்கிறதென்பதை நினைவில் கொள்ளவேண்டிய நாம் ,வெளிநாட்டில் இருந்து வந்தவர் பட்டியல் தாண்டி பரவுதல் மூலம் முதல்நிலைகளில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்கள் விமானியும் விமான நிலையத்தில் வேலை செய்யும் மருந்தக வேலையாளும் தான் என்பதனை மறக்கவும் கூடாது.
எனவே விமானசேவையினரையும் எம் துஆக்களில் சேர்த்துக்கொண்டு,
சில நாடுகளில் வேலைகளை கோவிட்கு பயந்து இராஜனாமா செய்வது போல் இவர்கள் செய்வதில்லையை போற்றிப் புகழ்வோம்

