கற்பித்தல் என்பது ஒரு தொழிலல்ல புனிதமான பணி!

கற்பித்தல் என்பது ஒரு தொழிலல்ல புனிதமான பணி!

💙சுவனத்துக்கு அழைத்துச் செல்லும் ஆசிரியர் பணி!

கற்பித்தல் என்பது ஒரு தொழிலல்ல. அது ஒரு புனிதமான பணி நபிமார்களின் பணி. நபி (ஸல்) அவர்கள் தன்னை அறிமுகப் படுத்தும்போது கூறினார்கள்,
“நான் இந்த உலகத்திற்கு ஓர் ஆசிரியனாக அனுப்பப்பட்டுள்ளேன்.”

அல்லாஹுத் தஆலா நபி (ஸல்) அவர்களை அறிமுகப்படுத்தும் போது, “மக்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் போதிப்பவர் கற்றுக் கொடுப்பவர்” (அல்ஜுமுஆ: 2) என்று அறிமுகப்படுத்துகின்றான்.

உலகத்தில் தோன்றிய எல்லா நபிமார்களும் ஆசான்களாகத் திகழ்ந்தார்கள். அத்தகைய இறைத்தூதர்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தான் ஆசிரியர்கள்.
 இவ்வாறு ஆசான்களாக வந்த இறைத்தூதர்கள் இரண்டு விடயங்களை சொன்னார்கள்.

1. அல்லாஹ்வுக்கு மாத்திரம் இபாதத் செய்யுங்கள், அவனுக்கு கட்டுப்பாடு வழிபடுங்கள்.

2. இந்தப் போதனைகளை புரிவதற்காக உங்களிடம் இருந்து எங்களுக்கு எந்தவொரு ஊதியத்தையோ, சம்பளத்தையுமோ கூலியாக கேட்க வில்லை.நாம் உங்களுக்கு கற்பிக்கிறோம் , சத்தியத்தை எடுத்துச் சொல்கிறோம், சரி பிழையை எடுத்துக்காட்டுகிறோம். ஆகவே இதற்கான கூலியை நமக்கு அல்லாஹ்விடம் மாத்திரமே இருக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் மனிதர்களுக்கு நல்ல விடயங்களை சொல்லிக் கொடுப்பவர்களுக்கு மலக்குகள் எந்தநேரமும் துஆ செய்து கொண்டிருக்கின்றனர் என்று.

நல்ல விடயங்களை கற்றுக்கொடுத்தல் என்பது இஸ்லாத்தை கற்பிப்பது மாத்திரம் அல்ல உலக நடைமுறை வாழ்க்கைத் திட்டங்கள்,  பாடசாலையில் நாம் கற்கும் பாடங்கள் , ஏனைய நல்ல விடயங்களை கற்பிப்பது அனைத்துமே... அதனை  முறையாக கற்பிப்பதால் அவர்களுக்கு அல்லாஹ்விடம் கூலி கிடைக்கும்.
 செய்யும் தொழிலுக்குக் கூட சுவனம் செல்ல வேண்டும் என்றால் இந்தப் பார்வை அவசியம். ஏனெனில் செய்யும் தொழிலும் அமானத் ஆகும்.

அறிவு என்பது உலகில் விட்டுச் செல்லும் சொத்துக்களில் ஒன்று அதைத்தான் நம் ஆசிரியர்களும் பணியாற்றுகிறார்கள்.

ஆசிரியர் தொழில் மனித உறவுகளோடு உறவாடும் உன்னதமான தொழில்.  சிறந்த ஆசிரியர்கள் கல்வியை ஊட்டுபவராக மட்டுமல்லாது ஆலோசகராக , ஒழுங்கமைப்பவராக , ஊக்குவிப்பவராக, உதவுபவராக இருப்பார்கள் இருந்தது சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்குவார்கள்.

ஆசிரியர்கள் சில சமயங்களில் மாணவர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு உள்ளாக வேண்டிய நிலமைகளும் மாணவர்களின் விமர்சனங்களுக்கு அகப்பட வேண்டிய நலமைகளும் ஏற்படுவதுண்டு.  அந்நிலையிலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை இலகுபடுத்தி ஆர்வமூட்டி போதிப்பது ஆசிரியர்கள் மாணவர்கள் மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடாகும்.

 முஸ்லிம் சமுதாயத்தின் முதல் ஆசான் நபி(ஸல்) அவர்கள் மக்களை அன்பின் அடிப்படையில் வழிநடத்துபவர்களாகவே இருந்தார்கள்.  இதனை பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்.
நபி ஸல் அவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலை கவணித்து  பக்குவமாகவே போதனை செய்து கல்வி புகட்டினார்கள்.
'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 69.

அறிஞர்கள் கூறுவதை அமைதியாக செவியேற்பது,

நபி(ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில் என்னிடம் 'மக்களை அமைதியுடன் செவி தாழ்த்திக் கேட்கும் படி செய்வீராக!' என்று கூறினார்கள். மக்கள் அமைதியுற்ற பின்னர் 'எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடவேண்டாம்' என்று கூறினார்கள்' என ஜரீர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 121

சராசரி ஆசிரியர்கள் பாடத்தை நடத்துகிறார்கள், சிறந்த ஆசிரியர்கள் நடைமுறையில் உதாரணங்களோடு கற்பிக்கிறார்கள்.
யாரிடம் கற்கிறோமோ அவர்கள் அனைவரும் உன்னதமான அறிவை போதிக்கும்  ஆசிரியர்களே!

நிச்சயமாக நாம் எமது பிரார்த்தனைகளில் அவர்களை இனைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் பேருதவியினால்
நம் அறிவுக்கண்களைத் திறந்துவிட்ட நம் ஆசான்கள் , ஆலிம்கள் , ஆலிமாக்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களின் பணிக்கு அருள் முறிந்து அவர்களின் பணி தொடர உதவியளித்து அவர்களின் ஆயுளையும் நீடிக்கச் செய்வாயாக!

அல்லாஹ் நம் அனைவரையும் பரந்த மனப்பாங்குடனும் , தெளிவான அறிவுடன் அவனுக்காக என்று மட்டும் செயற்படுபவர்களினது கூட்டத்தில் சேர்ப்பானாக!

ﺁﻣــــــــــــــــــﻴﻦ ﻳَﺎ ﺍﻟﻠﻪُ ﻳَﺎ ﺭَﺏَّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِـــــــــﻴْﻦ
Writer
Fathima Binth Zakariya

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.