சாதனை வீரர் சுல்பிகார் அவர்களை வரவேற்கும் நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில்

 


இனங்களுக்கிடையில் இன ஐக்கியத்தை வலியுறுத்தி நாடு தழுவிய தனி நபர் சைக்கிள் சவாரியை எட்டுநாட்களுக்குள் (1407KM) வெற்றிகரமாக நிறைவு செய்த  இலங்கையின் பெருமை, சாதனை வீரர் சுல்பிகார் அவர்களை வரவேற்கும் சிறப்பு நிகழ்வு நேற்று 19 சனிக்கிழமை ஜே.ஜே.பெளண்டேசன் ஏற்பாட்டில், பிரபல தொழிலதிபர்,சமூக சேவகர் DR.I.Y.M.அனீப் தலைமையில் கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்ச்சி பிரிவு பணிப்பாளர் யூ.எல் யாக்கூப்,சிரேஸ்ட அறிவிப்பாளர், சட்டத்தரணி,கவிஞர்  ஏயெம் தாஜ்,சிரேஸ்ட அறிவிப்பாளர் "மனித நேயன்" இர்சாத் ஏ காதர்,பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் ஆகியோர் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு சாதனையாளர் சுல்பிகார் குறித்து பாராட்டி பேசினர்.

நிகழ்வில் ஊடகவியலாளர்கள் அஸ்ரப் ஏ சமது, இர்சாத், ஜாவித்,ஹிதாயா நெளபல்,வஜீசாத் வஹாப்தீன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

JJ FOUNDATION பணிப்பாளர் Dr.IYM அனீப் சாதனை வீரர் சுல்பிகாருக்கு நினைவு சின்னம் வழங்கி, பொன்னாடை போற்றி கெளரவித்தார்.










Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.