ஈரானில் ஒரு மில்லியனை தொட்டது கொவிட் அலை

ஈரானில்  கொவிட் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது பற்றி அந்நாட்டின் சுகாதாரத்துறையினர் தெரிவிக்கையில், ஈரானில் 1,003,494 ஆக அதிகரித்துள்ளதுடன் 49,348 பேர் இதுவரையில் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரச அலுவலகங்களில் பணிபுரிவோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் சில அரச அலுவலகங்களை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதனால் மீண்டும் பழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் உணவகங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளின் தரவுகளின் அடிப்படையில் ஈரான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.