மருதமுனை நிசா
பொசுக்குணு போச்சு பத்துமாசம்
பத்து மாதம் சுமந்த தாயைப்போல்
பெத்த காலம் முதல்
தன் நெஞ்சில் சுமந்து
பத்திரமா காத்தவங்க எங்க வாப்பா
எங்களுக்கொரு சுமைகூட தராம
நிம்மதியாக தூங்கச்சென்று
இன்றோடு பத்து மாதம்
சொத்து சொகம் சேக்கதுல
கிள்ளளவும் பொருட்டில்ல
பிள்ளைகள பத்திரப்படுத்துவதுல
நல்ல காவலன்
ஓடியோடி ஓடாத் தேஞ்சாரு
உழச்சிக்கிட்டே இருப்பாரு
எல்லோரையும் சிரிப்பூட்டி
மகிழச்செய்த நகைச்சுவை நடிகர்
கதைகளை கதாபாத்திரமாய் மாறி நடித்துக்காட்டிய கதாநாயகன்
இஸ்லாமியபாடகளை
பாடிப்பாடி வேலை செய்யும் பாடகர்
பழையபாடல்களின் ரசிகர்
பாடல்களுக்கு வெகுழித்தனமாய் நடனமாடி எங்களை மகிழ்வூட்டியவர்
விசித்திரமாய் கவரக்கூடிய பேச்சுத்திறன் கொண்ட சிறந்த பேச்சாளன்
மொத்தமாய் சொன்னால் கலாரசிகன்

