கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பிஞ்சுக் குழந்தைகளைக் காப்பாற்ற புதிய மாஸ்க் கண்டுபிடிப்பு.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றி வருவதால் இத்தாலியின் மிகக் குறைந்த வயது நோயாளி எனக் கருதப்பட்ட இரண்டு மாத குழந்தை கொரோனா வைரஸ் நோயிலிருந்து மீண்டுள்ளது.
இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனை பிஞ்சு பிள்ளைகளுக்கு கொரோனா பரவாமல் தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.
அந்தக் குழந்தைகளுக்காக ஒரு பிரத்யேகமான முகக்கவசத்தை கண்டுபிடித்துள்ளது. இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும்.
தாய்லாந்து நாட்டில் சமுத் பிரகர்ன் மாகாணத்தில் உள்ள பாவ்லோ மருத்துவமனையின் பிரசவம் வார்டில் உள்ள சில தாய்மார்கள் தங்களின் குழந்தைகளைப் போர்வையால் போர்த்திக் கொண்டு கூடவே குட்டியான முகக்கவசங்களை அணிவித்து உள்ளனர். இதன் மூலம் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியுமென்று மருத்துவமனை வட்டாரம் கூறியுள்ளது.

