மூவின மக்கள் நல்லிணக்கத்தோடு அன்னியோன்யமாக வாழும் இடமாக கிழக்கு மாகாணம் பிரசித்தி பெற்றுள்ளது.

மூவின மக்கள் நல்லிணக்கத்தோடு அன்னியோன்யமாக  வாழும் இடமாக கிழக்கு மாகாணம் பிரசித்தி பெற்றுள்ளது.

 A. Anjela.
Trincomalee Campus, Eastern University of Sri Lanka

இலங்கையில் காணப்படும் மாகாணங்களுக்குள் கிழக்கு மாகாணம் மிகவும் தனித்துவமான ஒன்றாகும். இது திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதுடன் மேலும் இங்கு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இன மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வது மத சகவாழ்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது நிதர்சனமான உண்மை ஆகும்.

கிழக்கு மாகாணத்தில் 4415 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டு அம்பாறை மாவட்டம் காணப்படுகின்றது. சிங்கள இன மக்களை பெரும்பான்மையாக கொண்டிருப்பினும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடன் அன்னியோன்யமாகவும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் வாழும் மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். முன்னைய காலகட்டத்தில் அம்பாறை அம்பரகாம என்று அழைக்கப்பட்ட இது பின்னர் அம்பர, அம்பார என மாற்றப்பட்டு திகமதுல்ல என்றும் அறியப்பட்டது.

இலங்கையின் தென்கிழக்கில் அமைந்துள்ள திகமதுல்ல பிரதேசம் மன்னர் துட்டுகைமுனுவின் (கிமு 2 ஆம் நூற்றாண்டு) ஆட்சிக் காலத்தில் மக்கள் குடியேற்றங்களாக அமையப்பெற்றிருந்ததோடு, பின்னர் 1949 ஆம் ஆண்டு, கலாநிதி டி.எஸ். சேனநாயக்கவின் ஆதரவின் கீழ், காலோயா பல்நோக்கு திட்டம் மக்களின் குடியேற்றத்திற்கான தீர்வாக நிறுவப்பட்டது. முக்கியமாக விவசாயத்திற்கு கைகொடுக்கும் வண்ணமாக இங்கு மக்கள் குடியேற்றங்களை அமைத்துக் கொண்ட பிரதேசமே அம்பாறை. விவசாயத்திற்காக பெயர் பெற்ற பிரதேசமான இது சுற்றுலா பயணத்துறைக்கு வரலாற்று ரீதியாக பிரசித்தி பெற்ற இடமாகும்.



மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி திகமதுல்ல பிரதேசத்தில் மக்களின் தொகை 20 309 ஆகும். இங்கு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் வாழ்வதுடன் அவர்களின் அன்னியோன்யமான பிணைப்பு விஷேட அம்சமாகும்.

இன மத ஒற்றுமையுடன் வாழ போராடும் இன்றைய காலகட்டத்தில் அம்பாறை மக்களின் வாழ்க்கை முறையானது சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும். ஏனெனில்அவர்களின் ஒற்றுமை வலுவானது, உடைக்க முடியாததுமாக காணப்படுகின்றது.

மாணிக்கமடு பரிவார விஹாரையானது இன மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புனிதமான இடமாகவும், சிங்கள பங்களிப்பாளர்கள் இல்லாமல் ஒரு தமிழ் கிராமத்தால் சூழப்பட்ட ஒரு அழகான மலைத்தொடரில் இவ் விகாரை அமையப் பெற்றிருக்கின்றது. இது தமிழர்கள் மட்டுமே வாழ்கின்றன பிரதேசத்தில் அமைந்துள்ளது.

புனிதப் பகுதிக்கு மணிக்கமடுவ கிராமம் என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரதேசத்தின் பெயரினை அடிப்படையாகக் கொண்டு வணக்கஸ்தலத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாணிக்கமடு பிரதேசத்தில்உள்ள கல்வெட்டு ஒன்றில் இது கிமு 137-119 ஆண்டில் ரோஹானா பிராந்தியத்தை ஆண்ட மன்னர் காவந்திசாவின் மகன் சதாதிஸ்ஸா மன்னரின் காலம் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் மாணிக்கமடு பரிவார விகாரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய பூமி ஆகும்.

துட்டகைமுனு மன்னர் இலங்கையை ஐக்கியப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​அவரது சகோதரர் மன்னர் சதாதிசா திகமதுல்லாவை ஒன்றிணைக்க வருகை தந்த போது இங்கு பல விகாரைகள் அமைக்கப்பட்டன. அவற்றுள் பண்டைய மற்றும் பௌத்த புனித தலமான திகவாபி விகாரை மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இங்கு தீகவாபி சைத்தியம் சம்பந்தமாக நான்கு சைத்திய கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது.

மாணிக்கமடு பரிவார சைத்தியம் கோயிலின் முக்கிய கல்வெட்டுகளில் ஒன்றாக அடையாளம் காணப்படுகிறது. திகாமதுல்லாவை வளப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்த மன்னர் சதாதிசா பின்னர் பூசகர்களுக்காக தனது அரச அரண்மனையை தியாகம் செய்ததுடன், திவாவாபி சைத்தியத்தில் புதையலுக்காக கொண்டு வந்த விலைமதிப்பற்ற நகைகளை தற்காலிகமாக புதைத்தமையாலும் இப் புண்ணிய பூமியின் பெறுமதி மேலும் அதிகரித்தது எனலாம்.

மாணிக்கமடுவ என்ற பெயர் "மாணிக்க குகை", "மாணிக்க மடு" மற்றும் "மாணிக்க மலை" என்று பொருள்படும்  வகையில் அமையப் பெற்றது. மாணிக்கமடுவ என்பது ஒரு பாறை ஆகும். அதாவது இங்கு குன்றை சுற்றி நீரோடையும், குன்றின் உச்சியில் பொய்கை, கற்றூண்கள் மற்றும் புவியியல் அம்சங்கள் காணப்படுகின்றன.

1980 களில் கட்டப்பட்ட இந்த விகாரை, மலையின் அடிவாரத்தில் ஏராளமான சிங்கள பக்தர்கள் பயங்கரவாத அச்சுறுத்தல்களால் அப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டனர். மீண்டும் இவ் விகாரை 2014 ஆம் ஆண்டில் வணக்கத்திற்காக திறக்கப்பட்டது. மணிக்காமாடு ​​கிராமத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள்தான் விஹாரதிபதி அம்பகஹாபிட்டியே சீலாரத்ன தேரருடன் இணைந்து பணியாற்றினர்.

இலங்கையில் பல வரலாற்று புனித இடங்கள் இருந்தாலும், இந்த மத ஆதரவில் மாணிக்கமடு பரிவார விகாரை மிக முக்கியமானது மக்களின் இன ஒற்றுமையினாலேயே ஆகும்.இந்த புனித தலத்தைப் பார்வையிடும் ஒவ்வொருவரும் கோவில் மீதான இந்து பக்தர்களின் பக்தியினை புரிந்துகொள்கிறார்கள் என்பது உண்மை. அதாவது, தமிழ் மக்கள் எப்போதும் வணக்கஸ்தலத்துடனும் விகாராதிபதியுடனும் ஒன்றுபட்டிருப்பது காணக்கூடியதாக உள்ளது.

தமிழ் மக்கள் மாணிக்கமடு பரிவார விஹாரையுடன் மத சகவாழ்வுடன் இருந்தமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, மாணிக்கமடுவ நாகராஜா என்ற தமிழ் மனிதனின் தாராள மனப்பான்மை. அதாவது, மணமணிக்கமடு விகாரையினை அமைப்பதற்கு தனக்கு சொந்தமான நிலத்தை நன்கொடையாக வழங்குவதில் அவர் பின்னிற்கவில்லை. அவர் நன்கொடை வழங்கும் அளவிற்கு செல்வந்தரல்ல. தனது ஐந்து பிள்ளைகளை கரை சேர்ப்பதற்காக சாதாரணமாக கூலித் தொழில் செய்து அன்றாட வாழ்வை நடாத்துபவரே தனக்கு சொந்தமான காணியில் ஒரு பங்கை விகாரை அமைப்பதற்கு நன்கொடை வழங்கினார்.

அவரது தாராள மனப்பான்மையின் விளைவாக, வரலாற்று சிறப்புமிக்க மாணிக்கமடு விகாரை பௌத்தர்களுக்காக கட்டப்பட்டுள்ளது.

மாணிக்கமடுவில் பௌத்த சபை இல்லை என்றாலும், ஏராளமான தமிழ் பங்களிப்பாளர்கள் உள்ளனர். புத்த பெருமானுக்கான பூஜை, பௌத்த பிக்குகளுக்கு தானம் வழங்குவது, கோயில் பணிக்கான உழைப்பு போன்றவற்றை தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வழங்குகின்றனர்.

இந்த விகாரையில் அண்மையில் நடைபெற்ற சீவர பூஜை அவர்களின் பங்களிப்புக்கு சாட்சியமளிக்கிறது. கோவிலில் நடைபெறும் சிரமதான திட்டங்கள் மற்றும் சிறப்பு மத விழாக்களில் பௌத்தர்களுக்கு தமிழ் மக்களின் பங்களிப்பானது எப்போதும் அதிகமாகவே உள்ளது.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.