கொரோனா வைரஸ் தொற்றை முற்றாக நீக்கும் நோக்கோடு கிறுமிநாசினிகள் தெளிக்கும் வேலைத்திட்டம் இன்றைய தினம் (15) நான்காம் கட்டமாக கல்முனை பௌத்த விகாரை மற்றும் பாடசாலை பகுதியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது...
Helping Hands (உதவும் கரங்கள்) அமைப்பின் அனுசரனையுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கைபரப்பு செயலாளரும் முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான KMA. ஜவாத் அவர்களின் முயற்சியின் மூலமும் சொந்த நிதியின் மூலமும் கிறுமிநாசினிகள் தெளிக்கும் வேளைத்திட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
நிகழ்வில் உறுதுனையாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும் கல்முனை அமைப்பாளருமான கௌரவ MIM. அப்துல் மனாப் அவர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர் ஜூனைடீன் மான்குட்டி அவர்களும் இன்னும் பல சமூக ஆர்வளர்களும் கலந்துகொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது...



